பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகர்..
நானும் ரவுடிதான் படத்தில் ஆனந்தராஜின் அடியாள் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. தனியார் டிவி ஒன்றிலும் காமெடி நடிகராக நடிக்கிறார். வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருக்கும் இவர் சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபரேஷன் செலவே லட்சக்கணக்கில் ஆகிறதாம். இந்நிலையில் மருத்துவமனைக்குச் சென்ற நடிகர் விஜய் சேதுபதி அவரை சந்தித்து நலம் விசாரித்தார். தேவையான உதவி செய்வதாக ஆறுதல் கூறினார்.