கமல், ஷங்கர் இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்பு.. காரணம் இதுதான்..

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 அதிக பொருட்செலவில் படமாகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் கடந்த மாதம் நடந்த படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. அதை ரத்து செய்ய முடியாத நிலையில் கமல், ஷங்கர் இல்லாமல் உதவியாளர்கள் , டான்சர் மாஸ்டர் ஆகியோர் படமாக்கியதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கும் படத்தில் அவர் இல்லாமல் பாடல் காட்சி படமானது இதுதான் முதன் முறை.

More News >>