கனடா பிரதமரின் மனைவி ஷோபிக்கு கொரோனா நோய்..

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா மனைவி ஷோபி கிரகோரிக்கு கொரோனா நோய்த் தொற்று பாதித்துள்ளது. இதனால், ஜஸ்டினை 14 நாட்கள் தனிமையாக இருக்குமாறு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் பரவியுள்ள இந்த நோய் தாக்குதலில் சீனாவில் மட்டும் 3,150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 100 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவில் நேற்று(மார்ச் 12) வரை 74 பேருக்கு இந்நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மட்டும் கொரோனா தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியா மனைவி ஷோபி கிரகோரிக்கு கொரோனா நோய்த் தொற்று பாதித்துள்ளது. இதனால், ஜஸ்டினை 14 நாட்கள் தனிமையாக இருக்குமாறு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஷோபி கிரகோரி சமீபத்தில்தான் இங்கிலாந்து சென்று விட்டுத் திரும்பியிருக்கிறார். அதனால்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

More News >>