மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு..
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் அகவிலைப்படி(டி.ஏ) உயர்த்தப்படும். பஞ்சப்படி என்று அழைக்கப்படும் இது ஊதியத்தில் இணைத்து வழங்கப்படும். தற்போது அடிப்படைச் சம்பளத்தில் 17 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இதை 4 சதவீதம் உயர்த்தி, 21 சதவீதமாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று(மார்ச்13) ஒப்புதல் அளித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது. இது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்த்தப்படும் போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். எனவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.