என்னை கெட்டவார்த்தையில் திட்டிய விஷால்.. ஒருமையில் பேசி வெளுத்த மிஷ்கின்..
மிஷ்கின் இயக்க விஷால் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றது துப்பறிவாளன். இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. மிஷ்கின் கதை எழுதி இயக்க விஷால் கதாநாயகனாக நடித்தார். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. இந்நிலையில் மிஷ்கின், விஷாலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதுபற்றி விஷால் வெளியிட்ட அறிக்கையில், '13 கோடி செலவு செய்த பின் மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகி விட்டார். கதை எழுதுவதற்கு மட்டும் 35 லட்சம் செலவிட்டேன். வேறு எந்த தயாரிப்பாளரும் மிஷ்கினுக்கு இரையாகக் கூடாது. எனவே நானே இயக்க முடிவெடுத்துள்ளேன்' எனத் தெரிவித்தார்.
விஷாலுக்குப் பதில் அளிக்கும் வகையில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய மிஷ்கின் அவரை ஒருமையில் விளாசித் தள்ளினார். அவர் கூறியதாவது: துப்பறிவாளன் 2ம் பாகம் கதை எழுத 7 லட்சம் மட்டுமே செலவு செய்தேன். என்னை உருக்கி ஒருவருடம் அமர்ந்து இக்கதை எழுதினேன். கதையைக் கேட்டு விஷால் அழுதான். நானே தயாரிக்கிறேன் என விஷால் கூறினான். வேறு தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளார் என்று நான் தடுத்தும் கேட்கவில்லை. 32 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன். இப்படத்துக்கு நான் அதிகம் செலவிட்டதாகக் கூறுவதை விஷால் நிரூபிக்க வேண்டும்.விஷாலின் நண்பர்கள் நந்தா, ரமணா நடந்து கொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. திடீரென்று விஷால் கதை நன்றாக இல்லை என்றான். அதனால் படத்திலிருந்து வெளியேற முடிவு செய்தேன். அப்போது என் தாயை கெட்டவார்த்தையில் திட்டினான். கோபம் அடைந்த என் தம்பி இதைத் தட்டி கேட்க அனைவரும் சேர்ந்து அவனை அடித்தனர். விஷாலையும் ஒரு தம்பியாக நினைத்தேன். ஆனால் அவனோ ... அவனைத் தமிழ்நாட்டிடமிருந்து நான் காப்பாற்றினேன். இனிமேல், அவனிடமிருந்து தமிழ்நாட்டை நான் காப்பாற்ற வேண்டும். இனிமேல்தான் அவனுக்கு ஆப்பு இருக்கு. உன்னிடம் தர்மம் இருந்தால் வா குருக்ஷேத்திர போருக்கு. நான் ரெடிஇவ்வாறு மிஷ்கின் பேசியுள்ளார்.