கொரோனா வைரஸ் எதிரொலி.. ஆர்.எஸ்.எஸ் கூட்டம் ரத்து..

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் பல மாநிலங்களில் நுழைந்து விட்டது. இது வரை கொரோனா நோயால் 2 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 82 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆண்டுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் பொதுக் குழு, அகில பாரத பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் கூடும். இந்த ஆண்டு பெங்களூருவில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி மூன்று நாள் கூட்டமாக நடைபெறவிருந்தது. 11 மண்டலங்களிலிருந்து 1200 பிரதிநிதிகள், 35 மாநில பிரதிநிதிகள் மற்றும் பாஜக உள்பட இணைப்பு இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்பதாக இருந்தது.இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பையா ஜோஷி தெரிவித்தார்.

More News >>