டிரம்ப்புக்கு பரிசோதனை.. கொரோனா தொற்று இல்லை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை 3400க்கும் அதிகமானோர் பலியாகி விட்டனர். ஒன்றரை லட்சம் பேர் வரை இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் பாதித்த ஒருவர் இருமும் போது, தும்மும் போது அருகில் இருப்பவர்களுக்குப் பரவிவிடும். அல்லது நோய் பாதித்தவரிடம் இருந்து வைரஸ் ஒரு இடத்தில் படர்ந்து, அதில் நாம் கைகளை வைத்தாலே பரவிவிடும். அதனால் மக்கள் கூட்டமாக உள்ள இடத்திற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்குக் கடந்த வாரம் பிரேசில் நாட்டு அதிபரின் பிரதிநிதிகள் சென்றிருந்தனர். புளோரிடாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்ட போது அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கலந்து கொண்டார். அந்த விருந்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாகப் பின்னர் தெரிய வந்தது.

இதையடுத்து, டிரம்ப்புக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவை நேற்று தெரிவித்த வெள்ளை மாளிகை டாக்டர்கள், டிரம்ப்புக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்றார்.

More News >>