ரஜினியின் காலா டீசர் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம் (டீசர் உள்ளே)

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் நள்ளிரவில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ரிலீஸ் செய்தார்.

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் படம் காலா. கபாலிக்கு பிறகு பா.ரஞ்சித், ரஜினி, இணையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் காலா படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தநிலையில், தற்போது பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

மேலும், இந்தப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தனுஷ் அறிவித்தார். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், காலா படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தனுஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவால் மரியாதை செலுத்தும் வகையில் நேற்று டீசர் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், காலா டீசர் இன்று மார்ச் 2ம் தேதி காலை 10 மணியளவில் ரிலீஸ் செய்யப்படுவதால் தனுஷ் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று (2.03.2018) இரவு 12 மணியளவில் காலா டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார். எதிர்பாராத நேரத்தில் டீசர் ரிலீஸ் செய்தது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக அமைந்தது. இந்த டீசரில் வரும் காலாவின் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகி உள்ளது. மேலும், படத்தின் டீசரும் வைரலாகி வருகிறது.

More News >>