விஜய் சேதுபதிக்கு விஜய் முத்தம்.. மாஸ்டர் விழாவில் ருசிகரம்..
மாஸ்டர் படப்பிடிப்பின்போது அதில் நடிக்கும் விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து விஜய்க்கு முத்தம் தந்தார்.
அதுபற்றி குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய மாஸ்டர் பட ஆடியோ நிகழ்ச்சி தொகுப்பாளர், வாங்கிய கடனையும் வாங்கிய முத்தத்தையும் திருப்பி தந்து விடவேண்டும் என்பார்கள் நீங்கள் விஜய் சேதுபதிக்கு இந்த விழாவில் முத்தம் தந்துவிடுங் கள் என்றார். உடனே மேடையிலிருந்து கீழே இறங்கிச்சென்ற விஜய் முன் வரிசையில் அமர்ந்திருந்த விஜய் சேதுபதிக்குக் கட்டிப்பிடித்து முத்தம் தந்தார். அப்போது கரவொலி எழுந்தது.