மதம் பற்றிப் பேசுபவர்களிடம் பேசாமல் ஒதுங்கி இருங்கள். மாஸ்டர் விழாவில் விஜய் சேதுபதி அதகளம்..

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என்கிறார்கள். வில்லன் எல்லாம் இல்லை. இது ஹீரோ வில்லன் கதை இல்லை. இருவருக்கு இடையிலான மோதல். என் வழியில் அவர் குறுக்கிட்டால் அவர் வழியில் நான் குறுக்கிடுவேன். இப்படத்தில் எனது பாத்திரத்தை என் பாணியில் நடிக்கலாமா என்றேன். உங்கள் பாணியிலேயே தாராளமாக நடிக்கலாம் என்றார் விஜய்.

விஜய் பட விழாவை நான் கல்லூரியில் படிக்கும்போது பார்ப்பதற்கு பாஸ் வாங்கிக் கொண்டு வந்தேன். இப்போது இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு திருநெல்வேலியிலிருந்து வந்தபோது எப்போது வருவீர்கள் என்று என்னிடம் போனில் பேசினார்கள். நான் லேட்டாக வந்ததற்குக் காரணமும் திருநெல்வேலியில் நடந்த சூட்டிங்கில் இருந்து வந்ததுதான் காரணம். மற்றபடி வேறு எதுவும் இல்லை. இதை சொல்லா விட்டால் விழாவுக்கு லேட்டாக வந்ததாக என்னென்னமோ எழுதுவார்கள். விஜய் பற்றி கருத்துக் கேட்கிறார்கள். அவர் நல்ல மனிதர். சாமிக்காகச் சிலர் சண்டை போடுகிறார்கள். சாமியைக் காப்பாற்றுவதாகக் கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பேசாதீர்கள். சாமியை யாரும் காப்பாற்ற வேண்டாம் சாமியே தன்னை காப்பாற்றிக் கொள்ளும். சாமி மேலே இருக்கிறார். அவர் இங்கு வரமாட்டார். இந்த உலகம் மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டது. மனிதர்கள் தான் இங்கு வாழவேண்டும். உலகத்தை நேசிக்கிறோம் கடவுளைத் தள்ளி வைக்கிறோம். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

More News >>