கொரொனா தாக்குதலில் ஜேம்ஸ் பாண்ட் நடிகை.. ஒரு வாரமாகத் தொடர் காய்ச்சலால் பயம்..
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரேனோ வைரஸ் நோயால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானவர்கள் இறந்திருக்கின்றனர். திரையுலக நட்சத் திரங்களுக்கும் கொரேனோ வைரஸ், பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்ற வாரம் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிடா வில்சன் தம்பதிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் பட நடிகையையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
டேனியல் கிரெய்க் நடித்த 'குவான்டம் ஆப் சோலஸ்' ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஒலேகா குரைலென்கோ. அதேபோல் ஓபிலிவியன் என்ற சைன்ஸ் பிக்ஸன் படத்திலும் ஒலேகா நடித்திருந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் கூறும்போது,' ஒரு வாரமாக ஜூரத்தில் இருக்கிறேன். மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஜூரத்தாலும், சோர்வாலும் நான் என் அறை யை விட்டு வெளியே வரவில் லை. கொரோனோ அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை மேற்கொண்டு வீட்டை உள்பக்க மாக பூட்டிக்கொண்டு ஜன்னல் வழியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள்' என குறிப்பிட்டிருக்கிறார்.