கொரோனா வைரஸ் எதிர்க்கப் பிரபு தேவா நடிகை ஐடியா.. உடற்பயிற்சி செய்யத் தவறாதீர்கள்..
காபி ஒன்றின் விளம்பர படத்தில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டி, நடு வகிடெடுத்து தலைசீவி அம்ச மாக தோன்றும் அடா சர்மா திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அதகளம் செய்கிறார்.
சார்ளி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்திருந்த அதா முன்னதாக இது நம்ம ஆளு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தியில் கமாண்டோ2 மற்றும் 3ம் பாகம், தெலுங்கில் கல்கி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தனது இணைய தள இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கர்லாகட்டை சுழற்றும் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, 'கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க உடற்பயிற்சி செய்ய விரும்புவர்களுக்காகத்தான் இந்த வீடியோ பகிர்வு. தற்போதைக்கு ஜிம் எல்லாம் மூடப்பட்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதற்காக உடற்பயிற்சியை நிறுத்த முடியாது. வேறு இடத்தில் எங்காவது உடற் பயிற்சி செய்தே ஆக வேண்டும். உறுதியாகவும். பயமில்லாமலும் இருப்பதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இது உதவும்.
வேலை வேலை என்று பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும்போது உடற்பயிற்சி செய்ய எங்கே நேரம் இருக்கிறது என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். இப்போது உடற்பயிற்சி செய்வதை விட்டு ஒதுங்கக் கூடாது. நீங்கள் உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதா சர்மா குறிப்பிட்டிருக்கிறார்.