ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்..

சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 8 பேர், நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி, சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய 9 பேர் பதவியேற்றனர்.

தற்போது இவர்கள் அனைவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று 9 நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இவர்களில் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டதால், மற்ற 8 நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர். இவர்களுக்குச் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஐகோர்ட்டில் மொத்தம் உள்ள 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>