திரிஷா உதறிய வாய்ப்பு.. காஜல் அகர்வால் ஏற்றார்..

சிரஞ்சீவி நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஆசார்யா. இதில் திரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஒரு நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், திடீரென்று படத்தில் நடிக்காமல் விலகினார்.

முதலில் சொன்னபடி இல்லாமல் கதையை மாற்றி அமைத்தாக அவர் குற்றம் சுமத்தினார். திரிஷாவுக்கு பதிலாக நடிக்க தமன்னா, காஜல் அகர்வாலிடம் பேச்சு நடந்து வந்தது. தற்போது காஜல் அகர்வால் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

படத்திலிருந்து திரிஷா விலகியதற்கு காரணம் இப்படத்தில் சிரஞ்சீவி தவிர மற்றொரு இளம் நடிகரும் நடிக்க உள்ளாராம் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை நடிக்கவிருப்பதாகத் தெரிய வரவே தனக்குப் படத்தில் போதிய முக்கியத்துவம் கிடைக்காது என்பதால் விலகியதாகக் கூறப்படுகிறது.

More News >>