முற்றுகிறதா ஈ.பி.எஸ். அணி ஓ.பி.எஸ். அணி மோதல்? - புதுகையில் பரபரப்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அதிமுகவினர் அதிவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில், நாளை வருகின்ற 14ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்த விழாவில் பதாகைகள் வைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர் அவர்களுக்கும், மற்ற அதிமுக நிர்வாகிகளான கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட பன்னீர்செல்வம் ஆதர்வு நிர்வாகிகளுக்கும் மோதல் ஏற்பட்டது தொடர்பாக ஏற்கனவே நமது “தி சப் எடிட்டர்.காம்” [ஈ.பி.அஸ்.,  ஓ.பி.எஸ். அணிகளுக்கு இடையே தொடர்கிறதா மோதல்? - முதல்வர் விழாவில் சலசலப்பு] இணையத்தளம் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் படம் இடம்பெறாத வகையில் பதாகை வைப்பதுடன், ஒபிஎஸ் அணி சார்பில் தனியாக வரவேற்பு கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நேற்று இரவு பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான் தலைமையில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கார்த்திக் தொண்டைமான் வீட்டில் இருந்து அரசு மகளிர் கலை கல்லூரி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் வழியாக அண்ணாசிலைக்கு வந்தனர்.

பின்னர், அவர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  அகற்றப்பட்ட விளம்பர பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More News >>