லாவண்யா திருமணம் செய்து விவாகரத்தா? வாலிபர் உளறலால் பரபரப்பு..
நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டதாக வாலிபர் ஒருவர் உளறியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இணைய தளம் யூ டியூப்பில் பிரபலமாவதற்காக பலரும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசி பரபரப்பு உண்டாக்குகின்றனர். அந்த பாணியில் சுனிசித் என்ற வாலிபர் இரண்டு நடிகைகளைக் காதலிப்பதாகவும், ஒருவரைத் திருமணம் செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். தான் திரைப் படங்களில் நடித்திருப்பதாகவும் தன்னைப்பற்றி அந்த நபர் தெரிவித்திருக்கிறார். சுனிசித் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
சசிகுமார் ஜோடியாகப் பிரம்மன் படத்தில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. சந்தீப் கிஷன் நடித்த மாயவன் படத்திலும் நடித்திருக்கிறார். தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கில் நடித்து வருகிறார். லாவண்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதில்,'சுனிசித் என்ற வாலிபர் என்னை திருமணம் செய்துவிட்டதாகவும் பின்னர் பிரிந்துவிட்டதாகவும் யூ டியூப் சேனல் ஒன்றில் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார். 3 முறை கருக் கலைப்பு செய்ததாகவும் அவர் கூறி உள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பேட்டியை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.லாவண்யாவின் புகாரைப் பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட நபர் சுனிசித் என்பவரைத் தேடி வருவதுடன் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலிடம் விசாரணை மேற் கொண்டிருக்கின்றனர். இதே நபர் தமன்னாவைக் காதலிப்பதாகவும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.