இளம் நடிகருடன் யாஷிகா லவ்வா? தம்பி ராமையா கதறல்..
நடிகை யாஷிகாவும், நடிகர் மஹத்தும் காதலிப்பதாக அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கிசுகிசு பரவியது.
சமீபத்தில் தனது காதலியைத் திருமணம் செய்துகொண்ட மஹத் யாஷிகாவுடனான காதல் கிசுகிசுவுக்கு புல்ஸ்டாப் வைத்தார். தற்போது இளம் நடிகர் உமாபதியுடன் யாஷிகா ஜோடியாக டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் நெட்டில் வெளியானது.உமாபதி வேறுயாருமல்ல சாட்டை, விஸ்வாசம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கும் தம்பி ராமையாவின் மகன் ஆவார்.
யாஷிகாவுடன் தனது மகனை இணைத்து காதல் கிசுகிசு வெளியானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் தம்பி ராமையா.
இதுபற்றி அவர் கூறும்போது,'என் மகன் காதலிக்கிறான் என்று நெட்டில் பரவும் கிசுகிசுவில் உண்மை இல்லை. அவனை வைத்து தற்போது சிறுத்தை சிவா என்ற படத்தை இயக்கி வருகிறேன். இப்படத்தில் யாஷிகா நடிக்கிறார். இருவருக்குமான பாடல் காட்சி படமாக்கினேன். அந்த படங்களை வெளியிட்டு இருவரும் காதலிப்பதாக எழுதி வருகிறார்கள். என் மகளுக்குக் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. என் மகன் உமாபதிக்குச் சிங்கப்பூரில் பெண் தேடி வருகிறேன். அவனைப்பற்றி தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம்' எனக் கூறியிருக்கிறார்.