இன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து.. கோலிவுட்டை முடக்கி போட்ட கொரோனா..
கொரோனோ வைரஸ் பாதிப் பால் வர்த்தகம் முதல் பொழுது போக்கு துறை வரை முடங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா துறையையும் முடக்கிப்போட்டிருக்கிறது கொரோனா பீதி.
கொரேனோ தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காகத் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் இன்று 19ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி அளித்தபோது இது குறித்து அறிவித்தார்.
'கொரோனா வைரஸ் பாதிப்பால் சினிமா தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடாது என்பதால் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை அனைத்து படப் பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நிறுத்தப்படுகின்றன என்று அறிவித்தார். செல்வமணி. அதன்படி இன்றுமுதல் கோலிவுட்டில் ஷட்டவுன் ஆரம்பமாகியிருக்கிறது. வெவ்வேறு இடங்களிலும் ஊர்களிலும் நடந்து வந்த 36 க்கும் மேற்பட்ட படப் பிடிப்புகள், 60 டிவி சீரியல் படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடு, வெளிமாநிலம் சென்ற படக்குழுவினரும் அவசரமாகத் திரும்பி வந்தனர். மேலும் தியேட்டர்களில் படங்கள் திரையீடும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகிற்கு ரூ 200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.