தற்கொலை எண்ணத்துடன் தவித்த நடிகை.. மீண்டு வந்தது எப்படி?
வீரமும் ஈரமும், திருடி போன்ற தமிழ் மற்றும் கேரளா கபே, ரெட் சில்லீஸ் போன்ற மலையாள படங்களில் நடித்திருப்பவர் தன்யா மேரி வர்கீஸ்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜான் என்பவரைக் காதலித்து மணந் தார். ஜான் குடும்பத்தினர் கட்டு மான தொழில் செய்கின்றனர். வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்து கோடிகளில் வசூல் செய்தனர். அந்த நிறுவனத்தில் தன்யாவை இயக்குநராக இணைத்தார்கள். ஒரு கட்டத்தில் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமல் ஜான் குடும்பம் தலைமறைவானது. இதுதொடர்பான வழக்கில் தன்யா, ஜான் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவங்கள் நடந்து வருடங்கள் கடந்துவிட்டன. தற்போது அந்த சிக்கலிலிருந்து தன்யா மீண்டு வந்திருக்கிறார்.
இந்த சம்பவங்களை எண்ணி வருந்திய தன்யா கூறும்போது,' என் வாழ்க்கையில், நான் நினைத்துப்பார்க்காத அளவுக்குச் சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது கணவர் குடும்பத்தினர் தொழில் அதிபர்கள். அவர்களுக்கு ஆதரவாக நான் இருந்தேன். அதன் பிறகு அவர்களால் நான் பட்ட கஷ்டம் எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாது. அந்த நேரத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூட எண்ணினேன். எனது கணவரின் ஆதரவால்தான் தற்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஒன்றை மட்டும் புரிந்துகொண்டேன். யாரிடமும் அன்பு செலுத்தலாம் ஆனால் என்னைப்போல் அவர்களை யாரும் கண்முடித்தனமாக நம்பிவிடக்கூடாது. இன்றைக்கு எல்லா பிரச்சினைகளும் முடிந்துவிட்டன. அந்த கெட்ட தருணங்களையும் நாட்களையும் மறக்க எண்ணுகிறேன்' என்றார்.