பேட்ட 2ம் பாகத்தில் நடிப்பாரா ரஜினி? தீயாய் பரவும் புதுதகவல்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கினார் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். 80களில் தான் ரசித்த ரஜினியை மீண்டும் இப்படத்தில் காட்டும் முயற்சியை அவர் மேற்கொண்டார். அது ஓரளவுக்குப் பலன் கொடுத்தது.
பேட்ட படம் வெளியானபோதே மீண்டும் ரஜினி நடிக்கும் புதிய படமொன்றை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என்று பேசப்பட்டது. தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
பேட்ட படத்தின் 2ம் பாகம் கதையில் ரஜினியை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார். இப்படத்தை ஏற்கனவே ரஜினி நடித்த எஜமான், சிவாஜி உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக நெட்டில் தகவல் பரவி வருகிறது. ஆனால் ரஜினிகாந்த் இதுவரை எந்தவொரு படத்தின் 2ம் பாகத்திலும் நடித்ததில்லை. பாட்ஷா படம் சூப்பர் ஹிட்டானபோதே அப்படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பீர்களா என்று ரஜினியிடம் கேட்டபோது 2ம் பாகம் நடிக்க மாட்டேன் ஒரே பாட்ஷாதான் என்ற பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ட 2ம் பாகமாக இருந்தாலும் சரி, அப்படி இல்லாவிட்டாலும் மற்றொரு ஸ்டைலிஷான கதையில் ரஜினியை இயக்க கார்த்திக் சுப்பராஜ் தயாராக இருக்கிறாராம். தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 'அன்னாத்த' படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.