கும்கி நடிகையின் 4 வருட உடல் குறைப்பு முயற்சி.. மீண்டும் விக்ரம் பிரபுவுடன் வாய்ப்பு..
பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் பிரபு ஜோடி யாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படம் முடிவதற்குள்ளாகவே சுந்தரபாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படம் முடிந்து கும்கி படத்திற்கு முன்பாகவே வெளியானது.
இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் லட்சுமி மேனனுக்கு வரவேற்பு அதிகரித்தது. மளமளவென குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் என பல படங்களில் நடித்தார். ஆனால் திடீரென்று வேகம் குறைந்தது கடைசியாகக் கடந்த 2016ம் ஆண்டு றெக்க படத்தில் நடித் தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் அப்செட் ஆனார். நடிப்பு வேண்டாம் படிப்புதான் முக்கியம் என்று அவர் படிக்கச் சென்றார்.
நான்கு வருடங்கள் ஒரு பக்கம் படிப்பு மறுபக்கம் உடல் குறைப்பு எனத் தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். உடல் குறைப்பில் அதிக அக்கறை காட்டியதால் சில கிலோக்கள் எடை குறைந்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். அதற்குப் பலனாக மீண்டும் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுசீந்திரன் இயக்கும் படத்தில் இருவரும் இணைகின்றனர்.