கொரோனா பாதிப்பு.. இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு..
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 627 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த வைரஸ் வேகமாக உலகம் முழுவதும் 135 நாடுகளில் பரவியுள்ளது.
உலக அளவில் நேற்று(மார்ச் 20) வரை 2 லட்சத்து 76,462 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 91,954 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். நேற்று வரை 11,417 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்த 627 பேர் உயிரிழந்துள்ளனர். இத்துடன் அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4032 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், நேற்று மட்டும் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் அங்கு 47,021 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
சீனாவில் 81 ஆயிரம் பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றதில் 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் 91 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 73,156 பேர் சிகிச்சையில் உள்ளனர்.