பிரதமருக்கு வரலட்சுமி அடுக்கடுக்கான கேள்வி.. எதற்காகத் தெரியுமா?

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உருக்குலைத்துக் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு திகார் சிறையில் நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா தாயார் உள்ளிட்ட பலரும் தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தனர். பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில்,' "நீதி நிறைவேற்றப்பட்டது" எனத் தெரி வித்திருந்தார்.

இதுகுறித்து நடிகை வரலக்ஷ்மி கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில், 'ஏழு வருடங்களுக்குப் பிறகு தண்டனை நிறைவேற்றப் பட்டதை நீதி நிறைவேற்றப்பட்ட தாக நினைக்கிறீர்களா? குறைந்தது 6 மாதங்களுக்குள் பெண்கள் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் என நீங்கள் எண்ணவில்லையா? இப்படிப்பட்ட குற்றச் செயல்களால் பெண்கள் உயிரிழப்பது நியாயமா? குற்றவாளிகளுக்கு நீதி வழங்க நீண்ட காலம் எடுத்துக்கொள்வது சரியா?' என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.

More News >>