இயக்குநர் பொழப்பு பர்மனன்ட் இல்ல.. வெங்கட் பிரபு விரக்தி..
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாகக் கடந்த 2016ம் ஆண்டு சென்னை 28 இரண்டாம் பாகம் வெளியானது. அதன்பிறகு அவரது படம் எதுவும் திரைக்கு வரவில்லை. அவர் இயக்கியுள்ள பார்ட்டி என்ற படம் ரிலீஸ் ஆகாமலிருக்கிறது.
தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு என்ற படம் இயக்கி வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு ரசிகர்களுக்கு ஒரு டிவிட்டர் மெசேஜ் பகிர்ந்தார். அதில்,' சென்னையில் எல்லோரும் வெளியதான் சுத்துறோம். நமக்கு வர சான்ஸே இல்லனு. வேண்டாம் ப்ளீஸ், தயவு செஞ்சு வீட்ல இருங்க. உங்களுக்காக இல்லனாலும் நம்ம நேசிக்கிற வங்களுக்காக.. வித் லவ் கொரோனா' என குறிப்பிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
அதைக்கண்டு ரசிகர் ஒருவர்,'தலைவா உங்களுக்குக் காசு கொட்டுது. நாங்க அப்படியா சொல்லுங்கள். பெர்மனன்ட் ஜாப் இல்ல. வரலனா ஜாப் இல்லனு சொல் றாங்க. என்ன தலைவா பண்றது' என்று கேட்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ந்துபோன வெங்கட் பிரபு, 'பெர்மனன்ட் ஜாப்பா? எங்களுக்கா? என் படம் ரிலீஸ் ஆகி 3.5 (மூன்றரை) வருஷம் ஆகுது. எங்களுக்குத் தான் அதிகம் கணிக்க முடியாத வாழ்க்கை. பாதுகாப்பாக இருங்கள்' என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வேலை பர்மனென்ட் கிடையாது பட வாய்ப்பு வந்தால் இயக்குநர் இல்லாவிட்டால் வேலையில்லாமல்தான் இருக்க வேண்டும் என்பதையே இப்படி நாசுக்காக வெங்கட்பிரபு சுட்டிக் காட்டியிருக்கிறார்.