தயாரிப்பாளர் சங்க தேர்தல் மோதலுக்கு அணிகள் தயார்.. ராமநாராயணன் மகன்-டி.சிவா தலைவர் பதவிக்குப் போட்டி..

ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை தமிழ்த் திரைப்பட சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தற்போது தனிச் சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் சங்கம் உள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சங்கத்துக்குப் புதிதாகத் தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தர விட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சங்க தேர்தல் அட்டவணை தேதி அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே டி.சிவா தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி உருவாகி அதன் சார்ப்பில் போட்டியிடுபவர்கள் விவரம் பற்றி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மற்றொரு அணி உருவானது.

தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவரும், மறைந்த இயக்குநருமான ராம நாராயணன் மகன் என்.ராம சாமி என்கிற முரளி தலைமையில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி அமைக்கப்பட்டிருக்கிறது. தந்தை வழியில் முரளி சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரது அணி சார்பில் இரண்டு செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர், இரண்டு துணைத் தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன், பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின் போட்டியிடுகின்றனர். மேலும் 21 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கும் இந்த அணி சார்பில் போட்டியிடுபவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.

More News >>