வீட்டுக்குள்ளே இருங்கள்.. ஆரோக்கியமாக இருங்கள்.. பிரதமர் மோடி ட்வீட்

மக்கள் ஊரடங்கில் அனைவரும் இணைந்து பங்கேற்போம். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 175 நாடுகளில் பரவியுள்ளது. இது வரை 3 லட்சத்து 8,215 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் கூட்டம் சேரக் கூடாது. எவ்வளவு காலம் தனிமையாக இருக்கிறோமோ, அவ்வளவு விரைவாக வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டு விடும்.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் மக்கள் ஊரடங்கு என்ற பெயரில் மக்கள் தாங்களாகவே முன் வந்து ஊரடங்கை கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. முன்னதாக, பிரதமர் மோடி இன்று காலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மக்கள் ஊரடங்கில் எல்லோரும் இணைந்து பங்கேற்போம். இந்த ஊரடங்கு, கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவதில் மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும். நாம் எடுக்கும் இந்த தடுப்பு நடவடிக்கைகள் வருங்காலத்தில் நமக்கு உதவும். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>