ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் ரசிகர்? யாருன்னு தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அன்னாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது. ரஜினியின் 169வது படத்தை இயக்கப் போவது லோகேஷ் கனகராஜ், கே.எஸ். ரவிகுமார், கார்த்திக் சுப்பராஜ் என்று நெட்டில் வெவ்வேறு இயக்குநர்கள் பெயர்களுடன் தகவல் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் யார் இயக்குநர் என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில் 2 வருடம் கழித்து ரஜினி நடிக்கும் 170 வது படத்தை இயக்குபவர் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது. அதுவும் அவரது ரசிகர் இப்படத்தை இயக்கப்போகிறாராம். யார் அந்த ரசிகர் என்று ஆவல் மேலிட விசாரித்த போது ராகவா லாரன்ஸ் பெயர் சொல்லப்படுகிறது.

டிகரும், இயக்கு னரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினி யை பற்றி யாராவது தாக்கி பேசினால் உடனடியாக பதில் அளிப்பது லாரன் ஸின் சமீபத்திய வழக்கமாக இருக்கிறது. சமீபகாலமாக லாரன்ஸ் பேய் பட மன்னன் ஆகியிருக்கிறார். முனி, காஞ்சனா முதல் பாகம் 2 மற்றும் 3ம் பாகம் வரை நடித்திருக்கிறார். தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்கி வருகிறார். தமிழில் சரத்குமார் ஏற்று நடித்த திரு நங்கை வேடத்தை ஏற்று அவர் நடிக்கிறார். ரஜினியைப் பலமுறை சந்தித்திருக்கும் லாரன்ஸ் இதுவரை அவரை வைத்து படம் இயக்குவது பற்றியோ, ஸ்கிரிப்ட் சொன்னதாகவே எந்த தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>