டி.எஸ்.பி-யாகப் பதவியேற்ற இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கணையும், 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ஹர்மன்ப்ரீத் கௌர் பஞ்சாப் காவல் துறையில் டி.எஸ்.பி-யாக பதவியேற்றுள்ளார்.    இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இம்மியளவும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி களத்தில் நிரூபித்துக் கொண்டு வருகிறது. அதற்கு ஒரு சின்ன உதாரணம், தென்னாப்பிரிக்காவில் இந்திய ஆடவர் அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் வென்றது போன்றே, மகளிர் அணியும் வெற்றிவாகை சூடியது. இதற்கு உறுதுணையாக இருந்த வீராங்கனைகளில் ஒருவர்தான் ஹர்மன்ப்ரீத் கௌர்.    இந்நிலையில்தான் அவர் பஞசாப் போலீஸில் டி.எஸ்.பி-யாக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அம்மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் பதவிப் பிராமணம் செய்து வைத்தார். பதவி பிராமணத்துககுப் பின்னர், `ஹர்மன்ப்ரீத் கௌருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை பெறுமையாக‍க் கொள்கிறேன். அவர் நம்மை எல்லோரையும் கிரிக்கெட் களத்தில் பெருமையடையச் செய்திருக்கிறார். இனியும் அப்படி செய்வார் என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள்' என்ற் ட்வீட் தட்டியுள்ளார் அம்ரிந்தர் சிங். 
More News >>