கொரோனா பாதித்த பாடகி கனிகா டாக்டர்களிடம் ரகளை.. சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு..
பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டிருகிறார். அதற்கான சிகிசிச்சை எதுவும் எடுக்காமல் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார். பார்ட்டியில் கலந்து கொண்டு பலரிடம் சகஜமாக கைகுலுக்கி பழகியிருக்கிறார்.
இந்த விவரம் தெரிந்ததும் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் கூறும் அறிவுரை ஏற்காமல் தனக்கு இதெல்லாம் தர வேண்டும் ஆர்டர் போட்டு வருகிறாராம்.
உடனே டாக்டர்கள் நீங்கள் இங்கு பாடகியாகவோ, நடிகையாகவோ வரவில்லை நோய்க்கு சிகிச்சை பெற வந்திருக்கிறீர்கள் அதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அவரை எச்சரித்தனர.