தனுஷ் ரவுடி பேபி பாடல் 800 மில்லியன் புதிய சாதனை..
தனுஷ் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக சாய்பல்லவி நடித்த படம் மாரி 2. இப்படத்திற்காக தனுஷ் எழுதிப்பாடி சாய் பல்லவியுடன் இணைந்து நடனம் ஆடிய பாடல் ரவுடி பேபி. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்தார். படம் வெளிவருவதற்கு முன்பே யூடியூபில் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றது. தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
நெட்டில் இப்பாடல் வைரலானது மேலும் சர்வதேச பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம் பிடித்தது. அதிகம் பேர் பார்த்த பாடல் என்று சாதனை படைத்து வரும் இப்பாடல் தற்போது அதிகபட்சமாக 800 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இதுவொரு புதிய சாதனை ஆகும். மேலும் 3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.