விசு மகள்கள் அமெரிக்காவில் தவிப்பு.. கொரோனா தடையால் விமானங்கள் ரத்து..
சம்சாரம் அது மின்சாரம் பட இயக்குநர் விசு நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ரஜினி, சரத்குமார் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். விசுவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்குத் திரு மணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கின்றனர். தந்தை விசு இறந்த தகவல் தெரிந்து கதறி அழுதனர். ஆனால் கொரோனா வைரஸ் தடையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மகள்கள் இந்தியா வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர்.
இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலிருந்து தாய்க்கு போன் செய்து நிலைமையை விளக்கி அழுதனர்.