மாஸ்டர் டிரெய்லர் எப்போது?
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் . விஜய்சேதுபதி நெகடிவ் வேடம் ஏற்று விஜய்யுடன் மோதியிருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஒரு குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரைடு பாடல்களை தொடர்ந்து நேற்று அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடல் லிரிக்கல் வீடியோ யூ டியூபில் வெளியானது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது என்று ரசிகர்கள் இயக்குனரிடம் அப்டேட் கேட்டு வருகிறார்கள். மார்ச் 25ம் தேதி அன்று வெளியாகும் என ஒரு தகவலும் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரம் வெளியாகும் என்று இன்னொரு தகவலும் கூறுகிறது.
ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் பட ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்று கூறப் படுகிறது.