கணேஷ்பாபு இயக்கி நடிக்கும் படம் கட்டில்,சிருஷ்டி டாங்கே ஹீரோயின். கொரோனா வைரஸ் பாதிப்பு விழிப்புணர்வுக்காக நடிகர், நடிகைகள் தங்கள் பாணியில் வீடியோ வெளியிட்டு பேசி வருகின்றனர். கட்டில் படக்குழு சற்று வித்தியாசமாக கொரோனா பற்றிய கவிதை போட்டி அறிவித்திருக்கிறது. கொரோனா விழிப்புணர்வு கவிதை 12 வரிகளுக்கு மிகாமல் எழுதி kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வாகும் கவிதைக்கு முதல் பரிசாக 25 ஆயிரம், 2ம் பரிசாக 15 ஆயிரம், 3ம் பரிசாக 10 ஆயிரம் மற்றும் 20 பேருக்கு கவிதை நூல்கள் அளிக்கப்படும். வெற்றிபெறுபவர்களுக்கு கட்டில் ஆடியோ விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.