காஷ்மீரில் 50 நாளாக வீட்டுச் சிறையில் உள்ள உமர் அப்துல்லா விடுதலை..

காஷ்மீரில் 50 நாட்களாக வீட்டுச் சிறையில் உள்ள உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்படுகிறார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனால், அம்மாநிலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முன்னாள் முதல்வர்கள் உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள், அன்று முதல் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்பின், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்து காவலில் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த வாரம் பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, உமர் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதிகள், உமர் அப்துல்லாவை எப்போது விடுவிப்பீர்கள்? என்று காஷ்மீர் நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பியது.

இந்த சூழலில், உமர் அப்துல்லாவை இன்று விடுவிக்க உள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இன்று பிற்பகலில் அவர் விடுதலை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

More News >>