பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி.. கொரோனா பிரச்சினையால் வேலை இழப்பு..
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு இருப்பதால் ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. இதையடுத்து சினிமா படப் பிடிப்புகளும் மற்ற பட வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பெப்சி தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப் பட்டுள்ளனர் அவர்கள் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று நடிகர், நடிகைகளுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று நடிகர்கள் உதவி அறிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் ரூ 50 லட்சம் நிதி அறிவித்திருக்கிறார். சூர்யா, கார்த்தி 10 லட்சம் சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம் அறிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூட்டை அரிசி வழங்குகிறார்.