இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 562 ஆக அதிகரிப்பு..
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்தது.உலகம் முழுவதும் 4.22 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தாலியில் கடந்த 4 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று வரை 498 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. 7 பேர் பலியாகியிருந்தனர். நேற்றிரவு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி நோய் பாதித்தவர் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், இன்று(மார்ச்25) காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 48 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை பலியானவர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.