ஈரானில் இருந்து வந்த 277 இந்தியர் ஜோத்பூர் வருகை
ஈரானில் இருந்து நாடு திரும்பியவர்களில் 277 பேர், ராஜஸ்தானுக்கு வந்து சேர்ந்தனர்.
சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை சுமார் 19 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 4.22 லட்சம் பேருக்கு இந்த நோய் பாதித்திருக்கிறது. இந்தியாவில் இன்று(மார்ச்25) காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 48 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மொத்தம், மொத்தமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் விமான நிலையங்களுக்கு அருகேயே 14 நாட்கள் தனிமையில் தங்க வைப்பட்டு அதன்பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்படுகின்றனர். ஈரானில் இருந்து நாடு திரும்பிய 277 பேர் டெல்லியில் இருந்து இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு அனுப்பப்பட்டனர்.ஜோத்பூரில் அவர்களை ராணுவ அலுவலகம் அமைத்துள்ள பாதுகாப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் தனியாக தங்க வைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.