ஐரோப்பாவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 55 பேர் பலி: பொது மக்கள் அவதி
ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலில் சிக்கி 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக சாலைகள், ரயில்வே மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், போலந்தில் மட்டும் 21 பேரும், ஸ்லோவேகியாவில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முதியவர்கள், குழந்தைகள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்கள், மாற்று திறனாளிகள், மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர்பான உபாதைகளுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த சில நாட்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இதனால் பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறும் அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.