ரஜினிக்கு போட்டியாக சாருஹாசன் - பட்டையை கிளப்பு தா தா 87 டீஸர்
சாருஹாசன், ஜனகராஜ் வெளியாகவுள்ள ‘தா தா 87’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
உதிரிப்பூக்கள், தளபதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் சாருஹாசன். உடல்நிலைக் காரணமாக சில ஆண்டுகளாக திரைபடங்களில் நடிக்காமல் இருந்தார் சாருஹாசன். இந்நிலையில், சாருஹாசனின் வயதையொட்டி ‘தா தா 87’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது.
இந்த படத்தில் அவர் வயதான தாதா வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் சாருஹாசனுடன் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர், நடிகர் ஜனகராஜ். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த ஜனகராஜ், இந்தப் படத்துக்காக மீண்டும் களம் இறங்கியுள்ளார்.
இந்த இருவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் நிறைந்த கதைதான் ‘தா தா 87’. சாருஹாசன் தாதாவாகவும், ஜனகராஜ் ஹீரோயினுக்கு அப்பாவாக, ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தை விஜய் ஸ்ரீ இந்த படத்திற்கு லியான்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ளார்.
ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள காலா திரைப்படத்தின் டீஸர் வெளியாகி இருக்கும் நிலையில், மற்றுமொரு தாதா திரைப்படமான தா தா 87 வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
தா தா 87 டீஸர் இங்கே: