கொரோனா தடுப்பு பணி.. மக்கள் நன்கொடை தருமாறு தமிழக அரசு வேண்டுகோள்...

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக, பொது மக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மனமுவந்து நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமிநாசினி சாதனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது.நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்க ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளையும் கூட தயார்ப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. விவசாயத் தொழிலாளர், கட்டுமானத் தொழிலாளர் மற்றும் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையிழப்பால் தினக்கூலியை இழக்கிறார்கள். அவர்களுக்கும் இதர ஏழை மக்களுக்கும் உணவு வழங்க வேண்டியுள்ளது. எனவே, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பணிகள், ஏழை மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய்த் தடுப்பிற்காகவும் மக்கள் நிதியுதவி அளிக்கக் கோரப்படுகிறது.பொது மக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பை அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ஜி)ன் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்படும். நன்கொடைகளை மின்னணு மூலம் முன்னுரிமைப்படி வழங்கலாம். வங்கி இணையச் சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமாக https://er-e-c-e-ipt.tn.gov.in/cm-p-rf/cm-p-rf.html என்ற இணையதளம் வழியாகச் செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.இ.சி.எஸ். முறை மூலமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம். வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை - தலைமைச் செயலகம், சென்னை-9. (சேமிப்புக் கணக்கு எண்- 117201000000070, ஐ.எப்.எஸ்.கோடு - ஐ.ஓ.பி.ஏ. 0001172, சி.எம்.பி.ஆர்.எப். பான்-ஏ.ஏ.ஏ.ஜி.சி.0038எப்) இ.சி.எஸ். மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச் சீட்டைப்பெற, பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண் தங்களது முழுமையா முகவரி, இ-மெயில் விவரம் ஆகிய தகவல்களைக் குறிப்பிட வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்தும் நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது. வெளிநாடு வாழ் மக்கள் ஸ்விப்ட் கோடை பின்பற்ற வேண்டும். I-O-B-A-I-N-BB001, In-d-i-an Ov-e-rs-eas Ba-nk, Ce-nt-r-al Of-f-i-ce, Ch-e-n-n-ai ஆகும். மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, அரசு துணை செயலாளர் மற்றும் பொருளாளர், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை -600 009, தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் dsp-ay-c-e-ll.fi-n-dpt@tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்பலாம்.தற்போதைய நிலையில், நேரடியாக முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் நேரடியாக நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. ஆனாலும், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகைச் செய்தியாக வெளியிடப்படும். அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>