கொரோனா சிகிச்சைக்குத் தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்..

கொரோனா நோய்ப் பாதிப்பினால் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்காக ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றும் பணியில் தெற்கு ரயில்வே இறங்கியுள்ளது.

சீனாவில் தோன்றி உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொடிய நோயான கொரோனா வைரஸ், அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.இந்தியாவில் இன்று காலை 9.30 மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இது வரை 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 19 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிகமான மருத்துவமனைகள், படுக்கைகள் தேவைப்படும் என்பதால், ரயில்வே நிர்வாகம் ஏ.சி. அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளைச் சிறு மருத்துவமனைகளாக மாற்றியிருக்கிறது. தெற்கு ரயில்வே நிர்வாகம், சென்னையில் ஏ.சி. வசதி இல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றி வருகிறது. இந்த பெட்டிகளில் நடுவில் உள்ள படுக்கை(மிடில் பெர்த்) அகற்றப்படுகிறது. மேலும், மொபைல், லேப்டாப் சார்ஜ் வசதிகள் எல்லாம் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம்.

More News >>