ஹாலிவுட் பாடகி ரசிகர்களுக்கு உதவி..

கொரோனா தடையால் வேலையிழந்தவர்கள் மகிழ்ச்சி..

ஹாலிவுட் பாடகி அரினா கிராண்டே 26 வயதான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.கொரோனா தொற்று தடையால் வேலை இழந்து தவிக்கும் தனது ரசிகர்களுக்கு நிதி உதவி அனுப்பியிருக்கிறார். தனது டிவிட்டர் இணைய தள பக்கம் மூலம் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடும் வழக்கம் கொண்டவர் கிராண்டே. கொரானா தொற்றால் அமெரிக்கா பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் பலர் வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இதுகுறித்து பாடகியிடம் தெரிவித்த ரசிகர்கள் தாங்கள் வேலை இழந்து பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தனர். உடனடியாக அவர்களின் முழுவிவத்தை கேட்டறிந்தார். பின்னர் சுமார் 10 பேருக்கு அரினா கிராண்டே தலா 500 முதல் 1500 வரையிலான அமெரிக்கா டாலர் அனுப்பி வைத்தார்.

More News >>