உலகம் முழுவதும் 6.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு 30,879 பேர் சாவு..

உலகம் முழுவதும் நேற்று(மார்ச்28) வரை 6 லட்சத்து 63,740 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதுவரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே போல், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகமாகப் பரவியுள்ளது.இன்று(மார்ச்29) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 6 லட்சத்து 63,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 42,183 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

தற்போது 4 லட்சத்து 65,471 பேருக்கு ஆரம்பக் கட்ட நிலையில்தான் கொரோனா தொற்று உள்ளது. 25,207 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாகக் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

More News >>