குழந்தைகள் பசி தீர ரூ 7 கோடி அளித்தார்..

ஒரிஜினல் சின், லைஃப் ஆர் சம்திங் லைக் இட்,தி பாம் கலெக்டர், ஹெல்ஸ் கிச்சன் உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஏஞ்சலினா ஜோலி. இவர் கொரோனோ பாதிப்பால் பசியால்வாடும் லட்சக்கணக்கான குழந்தைகள் பெரும் கவலை அடைந்திருக்கிறார். குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அக்குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர். உலகம் முழுவதும் பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு நோ கிட் ஹங்ரி என்ற அமைப்பு உணவு வழங்கி வருகிறது. அந்நிறுவனம் மூலம் குழந்தைகள் பசியைத் தீர்ப்பதாகத் தனது சார்பில் ஏஞ்சலினா ஜோலி 10 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கியிருக்கிறார். நம்மூர் மதிப்பில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய்.இதுபற்றி ஏஞ்சலினா கூறும்போது,'100 கோடி குழந்தைகள் கொரோனா பாதிப்பால் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர். 2 கோடி குழந்தைகள் அமெரிக்காவில் உணவின்றி தவிக்கின்றனர். குழந்தைகளின் பசியைப் போக்க நோ கிட் ஹங்ரி அமைப்பு அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது' எனக் கூறி உள்ளார்.
More News >>