விஷ்ணு விஷால் பிரிவால் வாடும் காதலி..

நடிகரின் பொறுப்பான பதில்..

கொரோனா வைரஸ் தொற்று எல்லோரையும் வீட்டில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. சினிமா நட்சத்திரங்களும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்து வருகின்றனர். விஷ்ணு விஷால் ஏற்கெனவே எப் ஐ ஆர் என்ற படத்தை முடித்திருக்கிறார். அடுத்து தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு படம் ஜெர்சியில் நடிக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் கேர்ள் பிரண்ட் ஜுவாலா கட்டா. பேட்மிண்டன் வீராங்கனையான இவர் தனது இணையதள பக்கத்தில் விஷ்ணுவுடன் ஜோடியாக இருக்கும் படத்தை வெளியீட்டு, ' விஷ்ணு செல்லமே உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறேன்' என ஏக்கமாக தெரிவித்துள்ளார். அதற்குப் பொறுப்பாகப் பதில் அளித்திருக்கும் விஷ்ணு 'இப்போது சமூக இடை வெளிக்கான நேரம். பாதுகாப்பாக இருப்போம் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

More News >>