கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்ட கவுதமி காரணம்?

என்ன நடந்தது...

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்று விதிமுறைப்படி தன்னைத் தானே தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இது பரபரப்பானது. இதையடுத்து அந்த நோட்டீஸை மாநகராட்சியே அகற்றியது. இது குறித்து கூறிய கமல், 'ஆழ்வார் பேட்டை வீடு மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகமாக செயல்படுகிறது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டு வேறு வீட்டில் இருக்கிறேன்' என்றார்.

கமல்ஹாசன் வீட்டில் நோட்டிஸ் ஒட்ட காரணம் அவரது வீட்டு முகவரியில் கவுதமி வெளிநாடு சென்று வந்திருக்கிறார். அவரது பாஸ்போர்ட்டில் அந்த முகவரி இருந்ததால் தவறுதலாக கமல் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டது என மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நடிகை கவுதமியும், கமலும் சில ஆண்டுகள் கெட்டுகெதர் பாணியில் இணைந்து வாழ்ந்தனர் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதமி தனது டிவிட்டர் பக்கத்தில், 'கடந்த 20 தினங்களுக்கு முன் வெளிநாடு சென்று திரும்பினேன். உடல் நலத்துடன் இருக்கிறேன். விதிமுறைகளை புத்திசாலித்தனமாக கடைபிடித்து ஆரோக்கியதுடன் இருக்க கேட்டுக் கொள்கிறேன்'என தெரிவித்திருக்கிறார்.

More News >>