தமிழகத்தில் இது வரை 67 பேருக்கு கொரோனா..

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு 50 ஆக இருந்தது. இது இன்று 67 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோயிலிருந்து 5 பேர் குணமடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அறிகுறி காணப்பட்ட 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல், டாக்டர்களுக்காக N-95 முகக்கவசங்கள் 25 லட்சம் வாங்கவும் உத்தரவிட்டுள்ளேன். கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வர வேண்டியுள்ளது. கொரோனா அறிகுறி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது”என்றார்.

More News >>