10, 20 பேர் மட்டும் கூடியிருக்க எளிய முறையில் நடந்த திருமணங்கள்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இது வரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைக் கூட்டம் சேர்க்காமல் எளிய முறையில் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. காரைக்குடியில் பெரியசாமி என்பவருக்கும், கிருஷ்ணவேணி என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் நடத்தத் திட்டமிருந்தனர். அதன்படி, இன்று திருமணம் நடந்தது.ஆனால், மணமக்களின் உறவினர்கள் 10, 12 பேர் மட்டுமே கோயிலுக்கு வந்திருந்தனர். முத்துமாரியம்மன் சன்னதியில் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, புறப்பட்டுச் சென்றனர்.

இதே போல், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று காலையில் உறவினர்கள் பத்து பேர் முன்னிலையில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது. கோயில் நான்கைந்து நாட்களாக மூடப்பட்டிருக்கிறது. எனினும், கோயில் படிக்கட்டுகளில் இந்த திருமணம் நடைபெற்றது.இன்று முகூர்த்த நாள் என்பதால், பல ஊர்களிலும் இப்படி எளிய முறை திருமணங்கள் நடைபெற்றன.

More News >>