தேர்தல் பிரச்சார படத்துக்கு கமல் தயார்..

இந்தியன் 2 என்னவாச்சு..

கமல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக இருக்கிறார்.2021சட்டமன்ற தேர்தலில் கட்சி போட்டியிடுவதற்கான பணிகளை ஒரு பக்கம் கவனித்து வருகிறார். அதே சமயம் தேர்தல் நேரத்தில் சமூக கருத்துள்ள படமொன்றில் நடிக்கவும் முடிவு செய்திருந்தார். அதன்படி இந்தியன் 2ம் சரியான படமாக இருக்கும் என்று எண்ணி நடிக்க ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பு தொடக்கத்திலிருந்தே இப்படத்துக்கு ஏதாவது ஒரு தடங்கல் வந்துகொண்டே இருந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து படக் குழுவினரை நிலைகுலைய வைத்தது. மீண்டும் படப் பிடிப்பு பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில் புதிய படத்தில் நடிக்க எண்ணி உள்ளாராம் கமல்ஹாசன்.

ஏற்கெனவே தலைவன் இருக்கிறான் என்ற ஸ்கிரிப்ட் கமலிடம் தயாராக உள்ளது. அப்படத்தை அவரே டைரக்டு செய்யவும் ஆயத்தத்தில் இருக்கிறார். எனவே இப்படத்தைத் தொடங்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம். இதில் மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்தை அவர் ஆணித்தரமாகச் சொல்ல முடிவு செய்திருக்கிறார். எனவே இந்த படத்தை விரைவில் தொடங்குவார் என்று கமல் தரப்பு வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப் பார் என்றும் கூறப்படுகிறது.

More News >>