அஜித்தின் அடுத்தத் திரைப்படம்... இயக்குநர் இவரா..?
By Rahini A
வீரம், வேதாளம், விவேகம் திரைப்படங்களைத் தொடர்ந்து `தல' அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படம் `விஸ்வாசம்'. இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக `சிறுத்தை' சிவாவுடன் கூட்டணி சேர்கிறார் அஜித். விஸ்வாசம் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.
இந்நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தை `தீரன் - அதிகாரம் ஒன்று' திரைப்படத்தை எடுத்த ஹெச்.வினோத் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. வினோத், சமீபத்தில் அஜித்தை சந்தித்ததாகவும் அப்போது அவரிடம் படத்துக்கான ஒன்-லைனை சொன்னதாகவும் தெரிகிறது.
இது அஜித்துக்கு பிடிக்கவே ஒன்-லைனை முழு நீளக் கதையாக தயாருக்கும்படி அன்புக் கட்டளை போட்டுள்ளாராம். அநேகமாக, விஸ்வாசம் ஷூட்டிங் முடிந்த பிறகு இந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படலாம்.